ஃபார்முலா 1 வெற்றி மேடையில் ஈழத்தமிழர் அருண் ராஜ்குமார் - லங்காசிறி நியூஸ்
ஃபார்முலா 1 Constructors கிண்ணத்தை மெர்சிடிஸ் சார்பில் ஈழத்தமிழர் அருண் ராஜ்குமார் பெற்றுள்ளார். ஸ்பீல்பெர்க்கின் ரெட் புல் ரிங்கில் நடைபெற்ற ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணியின் ஜார்ஜ் ரஸ்ஸல் வெற்றி பெற்றார். மேலும் மெர்சிடிஸ் வீரர் கிமி அன்டோனெல்லி 3வது இடத்தைப் பிடித்தார். கன்ஸ்ட்ரக்டர்ஸ் பிரிவில் மெர்சிடிஸ் வெற்றி பெற்றதை அடுத்து நடந்த பரிசளிப்பு விழாவில், Constructors கிண்ணத்தை மெர்சிடிஸ் சார்பில் ஈழத்தமிழரான அருண் ராஜ்குமார் பெற்றுக்கொண்டார். இந்த Constructors கிண்ணமானது F1 பந்தயத்தில் கார்களை வடிவமைத்து உருவாக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியியலாளர்களின் கூட்டு உழைப்பிற்கு வழங்கப்படுகிறது. ஈழத்தமிழ் குடும்ப பின்னணியை கொண்ட அருண் ராஜ்குமார், பிரித்தானியாவில் வசித்து வருகிறார். பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றுள்ள அருண் ராஜ்குமார், படிப்பின் இறுதி 2 ஆண்டுகளில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி உயர் செயல்திறன் பவர்டிரெய்ன்ஸில் பயிற்சி மாணவராகச் சேர்ந்தார். அங்கு தயாரிப்புப் பொறியியல், சோதனைப் பொறியியல், செயலிழப்பு விசாரணை ஆகியவற்றில் அனுபவம் பெற்ற அவர், தனது கடின உழைப்பு மற்றும் திறமை மூலம் நிறுவனத்தின் பந்தயப் பாதையோர ஆற்றல் அலகுப் பொறியாளராக உயர்ந்துள்ளார். பந்தய வார இறுதிகளின் போது மெர்சிடிஸ் பவர் யூனிட்களின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையைக் கண்காணித்து மேம்படுத்துவது இவரது முக்கிய பொறுப்பாகும்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
