இலங்கை சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பிரித்தானிய கோடீஸ்வரர்: கையும் களவுமாக பிடித்த பொலிஸார் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பிரித்தானிய குடிமகன் ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையின் காலி, ஹபராதுவ நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 23ம் திகதி பிற்பகலில் பிரித்தானிய குடிமகன் ஒருவர் சுமார் 2,590 ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அந்த நபர் பிரித்தானியாவை சேர்ந்த 65 வயது Moti Graham Anderson என்று தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 26 ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுலா வந்த நிலையில், அவர் சூப்பர் மார்க்கெட்டில் பெரிய வெங்காயம், சொஸேஜ் வகைகள் மற்றும் காய்கறி வகைகளையே திருடியுள்ளார்.மேலும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த அதிகாரிகள், இதே நபர் இதற்கு முன்னதாக ஒரு நாளும் இந்த சூப்பர் மார்க்கெட்டில் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 65 வயது Moti Graham Anderson இலங்கைக்கு வருவதற்கு முன்னர் பிரித்தானியாவில் கோடீஸ்வர தொழிலதிபராக இருந்துள்ளார்.கைது நடவடிக்கையை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்ததாகவும் அந்தக் காணிகள் பறிபோயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கைது நடவடிக்கையின் போது சந்தேக நபரிடம் வெறும் 3 மாதங்கள் இலங்கையில் தங்கி இருப்பதற்கான விசா மட்டுமே இருந்துள்ளது. மேலும் இவரது மகன்களில் ஒருவர் பிரித்தானியாவில் கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
