இலங்கையில் போலி ஆவணங்கள் மூலம் பண மோசடி: 18 வெளிநாட்டினர் கைது - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கையில் போலி ஆவணங்கள் மூலம் பண மோசடி: 18 வெளிநாட்டினர் கைது  லங்காசிறி நியூஸ்

இலங்கையில் போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இலங்கையில் போலி ஆவணங்களை தயாரித்து இணையவழியில் பண மோசடி செய்து வந்த 18 வெளிநாட்டினர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தின் அதிகாரிகள், கொள்ளுப்பிட்டியின் கிரிபத்கொட பகுதியில் நடத்திய திடீர் சோதனையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 18 பேரில் 17 பேர் சீன நாட்டினர் என பொலிஸாரால் தகவல் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 62 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள், இலங்கைக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 2000 சிகரெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போலி ஆவணங்களை தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்களையும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றியதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

மூலக்கதை