கொழும்பில் உணவகம் ஒன்றில் பயங்கர தீ விபத்து: 3 பேர் வரை உயிரிழப்பு - லங்காசிறி நியூஸ்
கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கொழும்பு - தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 பேர் வரை உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலத்த தீக்காயங்களுடன் அருகிலுள்ள கொழும்பு தேசிய மருத்துவமனையில் 4 பேர் வரை அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் கோட்டை மாநகர சபைக்கு சொந்தமான 03 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், எரிவாயு கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய தலவத்துகொட பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
