இலங்கை முதியோர் இல்லத்தில் தீ விபத்து - 12 பேர் உயிரிழப்பு - லங்காசிறி நியூஸ்
இலங்கை முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஹொரனை - படகொட பகுதியில் உள்ள செனஹாசே கெடெல்லா மௌபியா செவனா முதியோர் இல்லத்தில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட போது, அந்த முதியோர் இல்லத்தில் 72 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயைக்கட்டுப்படுத்தி 51 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மேலும், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. முதியோர் இல்லத்தின் தண்ணீர் மோட்டாரிலும், அங்கிருந்த Multi-plug ஒன்றிலும் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்திற்குக் காரணம் என கூறப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
