கொழும்பில் மக்கள் கூட்டத்திற்குள் பாய்ந்த கார்: 6 பேர் வரை உயிரிழப்பு: தப்பியோடிய சாரதி - லங்காசிறி நியூஸ்
இலங்கையின் கொழும்பு நகரில் ஏற்பட்ட பயங்கர சம்பவத்தில் 6 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். கொழும்பின் மீகோட பகுதியில் வெசாக் தானசாலையில் பொதுமக்கள் கூடியிருந்த பகுதிக்குள் கார் ஒன்று புகுந்து அங்கிருந்த மக்கள் மீது மோதியது.இதில் அங்கிருந்த 3 பெண் மற்றும் 3 ஆண் என 6 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் 6 பேர் ஹோமகம மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஹோமகம - மீகோட பகுதியில் உள்ள சாலையில் அமைந்துள்ள கோவிலில் பொதுமக்கள் வரிசையாக கூடியிருந்த போது அடையாளம் தெரியாத நபர் வாடகை காரை பொதுமக்கள் மீது இடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இருப்பினும் தற்போது விபத்தினை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நபரை பொலிஸார் கைது செய்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பயங்கர சம்பவத்தில் காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக ஹோமகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
