இலங்கையில் துப்பாக்கிச்சூடு: பொலிஸாருக்கு கிடைத்த சிசிடிவி காட்சிகள் - லங்காசிறி நியூஸ்
இலங்கையின் களுத்துறையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான காரின் சிசிடிவி காட்சிகள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளது.இலங்கை களுத்துறையின் வெட்டுமகடை பகுதியில் பயங்கரமான துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்று காலை(28.05.2026) மோட்டார் சைக்கிளில் சென்ற நபரொருவர் மீது காரில் வந்த நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார். இதையடுத்து துப்பாக்கி சூடு காயத்துடன் கிழே விழுந்த மோட்டார் சைக்கிளோட்டி, களுத்துறை, நாகொட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் பின்னர் சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.இந்நிலையில் மோட்டார் சைக்கிளோட்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். அதன் ஒரு பகுதியாக, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய கார், நேபட பிரதேசத்தின் தெபுவன பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கைவிடப்ப்ட்ட நிலையில் காரினுள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் சம்பந்தப்பட்ட கார் தெபுவன அஞ்சல் அலுவலகம் அருகே கார் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
