இலங்கையில் போலி அமெரிக்க டொலர்களுடன் சிக்கிய தமிழ் நபர்: பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கையில் போலி அமெரிக்க டொலர்களுடன் சிக்கிய தமிழ் நபர்: பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்  லங்காசிறி நியூஸ்

இலங்கையில் பெருமளவு போலி டொலர் நோட்டுகளை வைத்திருந்த தமிழ் குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்புவின், வெள்ளவத்தையில் பெருமளவு போலி டொலர் நோட்டுகளை வைத்திருந்த தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பதாக நாட்டின் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து சுமார் 453 போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது,வெள்ளவத்தை பகுதியில் தற்காலிக தங்குமிடங்களை வழங்கும் இடமொன்றை சுற்றிவளைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சந்தேக நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட நபர் தலவாக்கலை பகுதியை சேர்ந்த 43 வயதுடைய நபர் என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அதே சமயம் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து எவ்வளவு போலி டொலர் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது, இந்த நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மூலக்கதை