இலங்கையில் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் தகவல் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கையில் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் தகவல்  லங்காசிறி நியூஸ்

இலங்கையில் மண்சரிவு தொடர்பாக இரண்டு மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மற்றும் மொனராகல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்றிரவு 9.30 மணி முதல் நாளை இரவு 9.30 மணி வரையில் இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவு மற்றும் மொனராகல் மாவட்டத்தின் படல்கும்புர மற்றும் வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை