இலங்கையில் மின்னணு கடவுச்சீட்டு திட்டம்: வெளியான முக்கிய செய்தி - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் மின்னணு கடவுச்சீட்டு (e-passport) திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.இலங்கையில் மின்னணு கடவுச்சீட்டு (e-passport) திட்டம் தொடர்பான டெண்டர்கள் வழங்கப்படுவதாக பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானது என்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கமளித்துள்ளார். அதில், யாருக்கும் இதுவரை எந்தவொரு டெண்டர்களும் வழங்கப்படவில்லை என தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும் இந்த செயல்முறை கொள்முதல் அளவில் தொடர்ந்த வண்ணமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த மின்னணு கடவுச்சீட்டு டெண்டர் நடைமுறைகள் முந்தைய அரசாங்கத்தின் காலத்திலேயே தொடங்கப்பட்டவை. இது தொடர்பாக சில நிறுவனங்கள் ஏற்கனவே சட்ட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார். இ-பாஸ்போர்ட் திட்டத்தின் பொது விசை உள்கட்டமைப்பு (PKI) தொடர்பான ஒரு தனி டெண்டர் செயல்முறை தற்போது ஆய்வில் இருப்பதாகவும், தேர்வு முறை குறித்து ஒரு நிறுவனம் மேல்முறையீட்டு குழுவிடம் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.' அமைச்சரவை இருப்பினும் இந்த விவகாரத்தை கொள்முதல் ஆணைக்குழுவின் பார்வையிட அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளது.இந்த டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் மிகவும் வெளிப்படையான முறையில் கையாளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதியளித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
