இத்தாலியில் இளம் பெண்ணை சீண்டிய இலங்கையர்: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை - லங்காசிறி நியூஸ்
இத்தாலியில் பெண் ஒருவர் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் Piazza Garibaldi சுரங்கப்பாதையின் 2வது வழித்தடத்தில் பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டல் செய்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண், அந்த இளைஞரின் பாலியல் சீண்டலில் இருந்து தப்பித்து அருகிலிருந்த ரயில்வே பொலிஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பெண்ணை பாலியல் சீண்டல் செய்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர், இலங்கையை பூர்வீகமாக கொண்ட 29 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மீது தற்போது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொள்ளை, திருட்டு மற்றும் பாலியல் சீண்டல்களை கட்டுப்படுத்துவதற்காக நேப்பிள்ஸ் மத்திய ரயில் நிலையம் மற்றும் Piazza Garibaldi ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
