கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு: 110 கிலோ போதைப் பொருட்களுடன் சிக்கிய பிக்குகள் - லங்காசிறி நியூஸ்
இலங்கை விமான நிலையத்தில் போதை பொருள்களுடன் பிக்குகள் கைதானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 22 பிக்குகள் போதைப்பொருட்களுடன் பிடிபட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிக்குகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 27ம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆனந்த விஜேபால, சட்டத்தின் முன் அனைவரும் சமம், பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டம், பலம் வாய்ந்தவர்களுக்கு ஒரு சட்டம் என்பது கிடையாது. பிக்குகள் கைது செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மகா சங்கத்தின் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி நாங்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அமைச்சர், நாட்டில் நாங்கள் ஒரு தேசிய போதைப்பொருள் தடுப்பு திட்டத்தை தொடங்கியுள்ளோம், அதன் கீழ் நாடு முழுவதும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, கட்டுநாயக்கவில் பல துறவிகள் உட்பட 110 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
