இலங்கையில் கல்வி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தும் பணி தீவிரம்: வெளியான அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தின் செயலாளர் நாலக்க கலுவெவ வெளியிட்ட தகவலில், 2026ம் ஆண்டுக்கான முதலாம் தர கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதலாம் தர மாணவர்களின் 2ம் மற்றும் 3ம் தவணைக்குரிய பயிற்சி நூல்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.மேலும் ஏப்ரல் 30ம் திகதிக்குள் அனைத்து பாடசாலைகளுக்கும் நூல்கள் விநியோகம் செய்து முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் தொடர்பான பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு அனைத்து மாகாண ஆசிரியர்கள் மற்றும் பணிபாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பயிற்சிகள் அனைத்தும் மே 16ம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று மாகாணப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. முதல் தவணைக்கான பாடத்திட்டங்களை நிறைவு செய்யாத பாடசாலைகள் இருப்பினும், அவற்றை இரண்டாம் தவணையில் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய கல்வி சீர்திருத்தங்கள் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தவும், நவீன கல்வி முறையை அறிமுகப்படுத்தவும் அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
