இலங்கை அரசு அலுவலகங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை அரசு அலுவலகங்களின் ஏப்ரல் 15 முதல் 17 வரையிலான செயல்பாடு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், எதிர்வரும் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் வழமை போன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அரச ஊழியர்கள் இணையவழியில் பணியாற்றுவதற்கு முன்னதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் பொதுமக்களுக்கான சேவைகளை எவ்விதத் தடையுமின்றி, வினைத்திறனான முறையில் வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரச நிறுவனங்களும் குறித்த மூன்று தினங்களிலும் வழமையான அலுவலக நேரங்களில் இயங்கும் என்பதுடன், ஊழியர்கள் அனைவரும் அலுவலகங்களுக்குச் சமூகமளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
