இலங்கையில் தனியாக பயணிகளுக்கு காத்திருக்கும் அபாயம்: பொலிஸார் எச்சரிக்கை
இலங்கையில் தனியாக பயணிக்கும் நபர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை அடிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது.யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு நகரத்திலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு தனியாக பேருந்தில் பயணிக்கும் பொது மக்களுக்கு மயக்க மருந்து கலந்த பிஸ்கட் ஆகியவற்றை கொடுத்து கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் இத்தகைய கொள்ளை கும்பல்களிடம் இருந்து கவனமாக இருக்குமாறு கிழக்கு மாகாணப் பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் எச்சரித்துள்ளார். சக பயணி போல அருகே அமர்ந்து மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டை கொடுத்து பின்னர் பயணிகளிடம் இருந்து காப்பு மோதிரம், சங்கிலி, தங்க ஆபரணங்கள் மற்றும் கைபையில் உள்ள பணம் என கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பயணி கண் விழிப்பதற்குள் கொள்ளையர்கள் ஏதாவது ஒரு இடத்தில் இறங்கி விடுகின்றனர்.சில நேரங்களில் மயக்கமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 3 தினங்களுக்கு பிறகு தான் சுயநினைவுக்கு வருகிறார்கள். எனவே பேருந்தில் தனியாக பயணம் செய்பவர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் எதையும் வாங்கி சாப்பிட கூடாது, மேலும் விழிப்பாகவும், அவதானமாகவும் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
