யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்: கலைப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்: கலைப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு  லங்காசிறி நியூஸ்

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நாளை முக்கிய போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர்.மாணவர்கள் மீது அடிக்கடி விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தல் ஏவப்படுவதாக குற்றம் சாட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நாளை பல்கலைக்கழக விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.இந்தப் போராட்டமானது நாளை காலை 10 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு பிரிவினரால் கடந்த பிப்ரவரி 4ம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் கருப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.இந்த நடவடிக்கையை கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை