யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய பீடாதிபதி: பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தேர்வு - லங்காசிறி நியூஸ்
யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திற்கு புதிய பீடாதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திற்கான புதிய பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கலைப்பீட சபையினால் தேர்வு செய்யப்பட்டுள்ள பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, புதிய பீடாதிபதியாக நாளை(21.03.2026) முதல் 3 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதமே யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சி.இ ரகுராமின் பதவிக் காலம் நிறைவு ஆகியிருந்தது. இலங்கை பல்கலைக்கழகங்கள் சட்டங்களில் சமீபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சட்ட திருத்தம் செயல்பாட்டிற்கு வரும் வரை பல்கலைக்கழகத்தின் புதிய பீடாதிபதிகள் நியமனத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இடை நிறுத்தி வைத்திருந்தது.1978 ஆம் ஆண்டின் 16ம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் திருத்தம் 2026/2 நடைமுறைக்கு வந்ததாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்ததை தொடர்ந்து, இன்று(20.03.2026) புதிய பீடாதிபதிக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், கலைப்பீட சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். சுமார் 27 கூடுதல் வாக்குகள் பெற்று பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா-வை புதிய பீடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
