கொழும்பில் பொலிஸார் அதிரடி: கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 15 பேர் கைது - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் பொலிஸார் நடத்திய திடீர் சோதனையில் 15 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பின் புறநகர் பகுதியான இரத்மலானை பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையில் பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் உடன் தொடர்புடைய 15 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி சோதனையை கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த நிலையில், 15 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 வாள்கள் மற்றும் 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது கைது செய்யப்பட்ட சில சந்தேக நபர்களுக்கு, வெளிநாட்டில் இருந்த படி சர்வதேச அளவில் பாதாள உலக செயல்களை இயக்கி வரும் அல்டோ தர்மா மற்றும் சாண்டோ ஆகியோருடன் தொடர்பு இருப்பதை அதிகாரிகள் ஆரம்பக்கட்ட விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் உள்ளூர் தரகர்கள் மூலம் செயல்பட்டு வந்ததாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் குறித்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
