இலங்கையில் அதிகரிக்கும் வெப்பநிலை: பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக பாடசாலைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வெப்பநிலை நிலவுவதால் பாடசாலைகளில் வெளிப்புற செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை தவிர்க்குமாறும் இலங்கை சுகாதார அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. இந்த அறிவிப்புகளை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். அறிவுரைகளை பின்பற்றாத பாடசாலைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.மட்டகளப்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முரளீஸ்வரன், பெற்றோர் தமது பிள்ளைகளை வெயிலில் அலைய விடாமல், உடல் இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாமையும், அவர்களுக்கு தேவையான நீர், ஓய்வு ஆகியவற்றை சரியாக வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் மாணவர்கள் அதிக தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஓய்வாகவும் நிதானமாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அதே சமயம் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் என பொதுமக்கள் அனைவரும் வெப்பநிலையில் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், இந்த வெப்ப காலத்தை அபாயகரமான சூழ்நிலை எனக் கருதி, வெளியில் செல்வதை தவிர்க்கவும், தேவையான நீர் ஆகாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் ஆர். முரளீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
