QR குறியீடுகளை ஸ்கேன் செய்தால் எரிபொருள்: இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறை - லங்காசிறி நியூஸ்
இலங்கை முழுவதும் QR குறியீடுகளை பயன்படுத்தி பெட்ரோல் நிரப்பும் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது. இலங்கையிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருள் விநியோகம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த QR குறியீடுகளை பயன்படுத்தி பெட்ரோல் நிரப்பும் நடைமுறை இன்று முதல்(15.03.2026) அமுலுக்கு வருவதாக இலங்கையின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது..இதன்படி, http://fuelpass.gov.lk என்ற இணையத்தளத்தின் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் போது, அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை வழங்கி விட வேண்டும். இறுதியாக உங்கள் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும் ரகசிய இலக்கத்தை (OTP) பதிவு செய்ய வேண்டும். பின்னர், உங்கள் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர், உங்கள் வாகனத்திற்கான விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு தனிப்பட்ட QR குறியீடு (QR Code) வழங்கப்படும். இந்த தனிப்பட்ட QR குறியீடுகளை ஸ்கேன் செய்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், அதை உங்கள் தொலைபேசிக்கு பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
