அதிகரிக்கும் எரிபொருள் நெருக்கடி: இலங்கைக்கு டீசல் வழங்க இந்தியா பரிசீலனை - லங்காசிறி நியூஸ்
ஈரானுடான அமெரிக்கா-இஸ்ரேலின் போர் நடவடிக்கையால் உலகளாவிய அளவில் எரிசக்தி தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்தவொரு வர்த்தக கப்பல்களும் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் பல்வேறு உலக நாடுகளில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளிடம் இருந்து வந்து டீசல் விநியோகத்திற்கான கோரிக்கைகளை ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அண்டை நாடுகளுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா இருந்து வருகிறது.பங்களாதேஷ் இந்தியாவிடம் நேரடியாக டீசல் விநியோகத்திற்கான கோரிக்கையை முன்வைத்து இருப்பதாகவும், அது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், கடந்த 2017 ம் ஆண்டு முதல் பங்களாதேஷ் நாட்டிற்கு இந்தியா டீசல் ஏற்றுமதி செய்து வந்தாலும், இந்தியாவின் சுத்திகரிப்பு திறன் மற்றும் உள்நாட்டு தேவைகளை கருத்தில் கொண்டு பங்களாதேஷின் கோரிக்கை குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதைப்போல இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளிடம் இருந்தும் எரிசக்தி தேவை தொடர்பான கோரிக்கைகள் வந்து இருப்பதாகவும், அது தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
