மூழ்கிக்கொண்டிருந்த ஈரான் கப்பலில் இருந்தவர்களை மீட்ட இலங்கை கடற்படை - லங்காசிறி நியூஸ்
மூழ்கிக்கொண்டிருந்த ஈரான் கப்பலில் இருந்தவர்களை இலங்கை பாதுகாப்பு படை மீட்டுள்ளது. ஈரானை சேர்ந்த ஐரிஸ் தேனா(Iris Dena) என்ற கப்பல், இலங்கையின் காலியில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இன்று காலை 5 மணியளவில் மூழ்கிக்கொண்டிருப்பதாக அபாய சமிக்ஞை (Distress call) வெளியிட்டுள்ளது. அபாய சமிக்ஞை கிடைத்தவுடன், 2 இலங்கை கடற்படை கப்பல் ஒரு விமானம் மூலம் கூட்டு மீட்பு நடவடிக்கையை இலங்கை மேற்கொண்டுள்ளது. இந்த கப்பலில் 180 பேர் பயணித்த நிலையில், அதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக காலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் தெரிவித்துள்ளார். இந்த கப்பல் விபத்துக்குள்ளானதா அல்லது தாக்குதல் நடவடிக்கையில் பாதிப்படைந்ததா என்பது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அது தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து உடனடி பதில் எதுவும் இல்லை. ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் தொடங்கப்பட்டதில் இருந்து, ஓமன் கடற்பரப்பு அருகே இருந்த 2 எண்ணெய் டேங்கர் கப்பல்களை ஈரான் தாக்கியுள்ளது. வளைகுடா கடல்பாதை வழியாக எண்ணெய் கப்பல்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல அமெரிக்க கடற்படை தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான முக்கிய கடல்வழி வணிக பாதையான ஹார்முஸ் நீரிணை தங்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அதன் வழியே செல்லும் கப்பல்களை தாக்குவோம் எனவும் ஈரானின் IRGC அறிவித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
