மூழ்கிக்கொண்டிருந்த ஈரான் கப்பலில் இருந்தவர்களை மீட்ட இலங்கை கடற்படை - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
மூழ்கிக்கொண்டிருந்த ஈரான் கப்பலில் இருந்தவர்களை மீட்ட இலங்கை கடற்படை  லங்காசிறி நியூஸ்

மூழ்கிக்கொண்டிருந்த ஈரான் கப்பலில் இருந்தவர்களை இலங்கை பாதுகாப்பு படை மீட்டுள்ளது. ஈரானை சேர்ந்த ஐரிஸ் தேனா(Iris Dena) என்ற கப்பல், இலங்கையின் காலியில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இன்று காலை 5 மணியளவில் மூழ்கிக்கொண்டிருப்பதாக அபாய சமிக்ஞை (Distress call) வெளியிட்டுள்ளது.  அபாய சமிக்ஞை கிடைத்தவுடன், 2 இலங்கை கடற்படை கப்பல் ஒரு விமானம் மூலம் கூட்டு மீட்பு நடவடிக்கையை இலங்கை மேற்கொண்டுள்ளது. இந்த கப்பலில் 180 பேர் பயணித்த நிலையில், அதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக காலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் தெரிவித்துள்ளார். இந்த கப்பல் விபத்துக்குள்ளானதா அல்லது தாக்குதல் நடவடிக்கையில் பாதிப்படைந்ததா என்பது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அது தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து உடனடி பதில் எதுவும் இல்லை. ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் தொடங்கப்பட்டதில் இருந்து, ஓமன் கடற்பரப்பு அருகே இருந்த 2 எண்ணெய் டேங்கர் கப்பல்களை ஈரான் தாக்கியுள்ளது.  வளைகுடா கடல்பாதை வழியாக எண்ணெய் கப்பல்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல அமெரிக்க கடற்படை தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான முக்கிய கடல்வழி வணிக பாதையான ஹார்முஸ் நீரிணை தங்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அதன் வழியே செல்லும் கப்பல்களை தாக்குவோம் எனவும் ஈரானின் IRGC அறிவித்துள்ளது. 

மூலக்கதை