இலங்கையை புரட்டிப் போட்ட டித்வா புயல்: காணாமல் போன 173 பேர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கையை புரட்டிப் போட்ட டித்வா புயல்: காணாமல் போன 173 பேர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்  லங்காசிறி நியூஸ்

டித்வா புயலில் சிக்கி காணாமல் போன 173 பேரை இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த இலங்கையையும் டித்வா சூறாவளி மொத்தமாக புரட்டிப்போட்டது என்பது யாராலும் மறக்க முடியாத ஒன்று. இலங்கையின் தெற்கு கடற்கரையை ஒட்டி கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 25ம் திகதி குறைந்த காற்றழுத்தமாக உருவானது பின்னர் நவம்பர் 27ம் திகதி டித்வா சூறாவளியாக மாறியது.டித்வா சூறாவளியினால் கிட்டத்தட்ட 22 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் டித்வா புயலினால் உயிரிழந்தனர்.அதிகமான உயிரிழப்புகள் மத்திய பகுதியான பதுளை மாவட்டத்தில் பதிவாகியிருந்தது. இது இலங்கையில் இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட மிகப்பெரிய உயிரிழப்பாக பார்க்கப்படுகிறது.டித்வா புயலில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1150 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் பலர் தங்கள் இருப்பிடத்தை இழந்து வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். டித்வா புயல் கடந்து சென்றாலும், அது ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் டித்வா புயல் மீட்பு பணிகளும் 93 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 173 பேரை இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல் தெரிவித்து இருப்பது கவலை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை