மட்டக்களப்பில் அதிகரித்த முதலைகள் நடமாட்டம்: சமூக ஆர்வலர்கள் விடுத்த எச்சரிக்கை - லங்காசிறி நியூஸ்
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த பருவ மழையானது குறைய தொடங்கியுள்ளது. இந்நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமியக் குளங்களில் முதலைகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தகவல் படி, போரதீவு பற்று பகுதிக்கு உட்பட்ட வெல்லாவெளி, கோயில் போரதீவு, பொறுகாமம் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள கிராமியக் குளங்களில் முதலைகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் மேல் குறிப்பிட்ட குளங்களில் முதலைகள் நடமாட்டம் இருந்த போது, அப் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடு, மாடுகளை முதலைகள் தாக்கிய சம்பவமும் முன்னர் பதிவாகியுள்ளது. இதனால் தற்போதைய முதலைகள் நடமாட்டம் அப்பகுதி மக்களை மேலும் கவலை அடைய வைத்துள்ளது. அதே சமயம், குறிப்பிட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
