இலங்கையில் நிச்சயம் செய்யப்பட்ட இளம் தம்பதிக்கு நேர்ந்த சோகம் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கையில் நிச்சயம் செய்யப்பட்ட இளம் தம்பதிக்கு நேர்ந்த சோகம்  லங்காசிறி நியூஸ்

இலங்கையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம் தம்பதி நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.பெற்றோர்களால் தம்புள்ளையில் நிச்சயம் செய்யப்பட்டு 3 மாதங்களே ஆன நிலையில், இளம் தம்பதி  இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.உயிரிழந்த தம்பதியினரின் இறுதிச் சடங்கு யாபகம பொது மயானத்தில் இன்று மதியம் நடைபெற்றது. தம்புள்ள யாபகமவைச் சேர்ந்த 22 வயது டிலந்த பூர்ணாவும், அவரது வருங்கால மனைவியாக நிச்சயம் செய்யப்பட்ட நவோத்யா செனவிரத்ன என்ற பெண்ணுமே விபத்தில் சிக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இந்த இளம் தம்பதி கம்பயா பகுதியில் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் அப்பகுதிலேயே வாடகைக்கு வீடு ஒன்று எடுத்து தங்கியிருந்துள்ளனர். அலுவலக விடுமுறையை முன்னிட்டு பெற்றோர்களை சந்திப்பதற்காக மோட்டார் சைக்கிள் தம்புள்ளைக்கு சென்று கொண்டிருந்த போது கண்டி-கொழும்பு பிரதான சாலையில் உள்ள வத்துபிடிவல பகுதியில் பேருந்து மோதி உயிரிழ்ந்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்த கூடுதல் விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை