வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு:இலங்கையில் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த நபர் கைது - லங்காசிறி நியூஸ்
வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பண மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கி தருவதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக நீர்கொழும்பு பகுதியில் பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் கிட்டத்தட்ட ரூ.55 லட்சம் பெற்று, அளித்த வாக்குறுதி படி எந்தவொரு வேலையும் வாங்கி தரவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் இறுதியில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விசாரணையின் போது அந்த அலுவலகத்தில் இருந்த வேலை ஒப்பந்தங்கள் மற்றும் கடவுச்சீட்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய தகவலின் படி, கைது செய்யப்பட்ட நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் விசா ஆலோசனை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் நடத்தி வந்தவர்கள் மூன்று பேரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அதிரடியாக கைது செய்துள்ளது.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
