இலங்கையில் போதைப்பொருளுடன் சிக்கிய பாடசாலை காவலாளி: இருவரை கைது செய்த பொலிஸார் - லங்காசிறி நியூஸ்
கொழும்புவில் போதைப் பொருளுடன் இருவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கொழும்பு கோமாகமை பகுதியில் பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போது “ஐஸ்” போதைப் பொருட்களுடன் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 31 மற்றும் 34 வயதுடைய கடுவெலை மற்றும் கெஸ்பாவை பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. விசாரணையின் போது போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட 34 வயது நபர் பாடசாலை ஒன்றின் காவலாளி என்பதை கண்டுபிடித்துள்ளனர். இருவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இருவரும் நீண்ட காலமாக இந்த பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தனரா என்பது குறித்தும் பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
