மட்டக்களப்பிற்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை: விவசாயிகள் கடும் பாதிப்பு - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
மட்டக்களப்பிற்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை: விவசாயிகள் கடும் பாதிப்பு  லங்காசிறி நியூஸ்

கனமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் சிக்கியுள்ளன. இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் நிலவிய காற்று சுழற்சியானது, அதே இடத்தில் தாழ்வு பகுதியாக தொடர்ந்து நீடித்து வருவதன் காரணமாக கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று மாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடைகள் நடைபெற்று வரும் நிலையில், கொட்டி தீர்க்கும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதே சமயம் பயிர்களை அறுவடை செய்து முடித்தவர்கள் அதை பாதுகாப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை