இந்தியா பாகிஸ்தான் மோதல்: இலங்கைக்கு செல்லும் விமான கட்டணம் திடீரென பல மடங்கு உயர்வு - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இந்தியா பாகிஸ்தான் மோதல்: இலங்கைக்கு செல்லும் விமான கட்டணம் திடீரென பல மடங்கு உயர்வு  லங்காசிறி நியூஸ்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி இலங்கையில் நடைபெற உள்ள நிலையில் இலங்கைக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  நீண்ட இழுபறிக்குப் பிறகு, பிப்ரவரி 15ம் திகதி கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் அரசு தங்களது கிரிக்கெட் அணிக்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் இந்த செயல் கிரிக்கெட் விளையாட்டின் மாண்பை காத்திருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் பலராலும் கூறப்படுகிறது.பாகிஸ்தான் அரசின் முடிவு வெளியான உடன், இலங்கைக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. மும்பை மற்றும் சென்னையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் விமானக் கட்டணங்கள் வழக்கத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளன.பயணம் வெறும் 1 மணி நேரம் 20 நிமிடமாக இருந்தாலும், சென்னை ரசிகர்களிடையே நிலவும் அதீத டிக்கெட் தேவையால் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதைப்போல துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் இருந்து கொழும்பு வரும் விமானக் கட்டணங்களும் உயர்ந்துள்ளன.

மூலக்கதை