இலங்கை அறிமுகம் செய்துள்ள Digital Nomad Visa., சுற்றுலா விசா காலம் நீட்டிப்பு - லங்காசிறி நியூஸ்
இலங்கை அரசு, Remote Work மற்றும் சுற்றுலா துறையை வலுப்படுத்தும் நோக்கில் புதிய டிஜிட்டல் நோமட் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த விசா, வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்காக ஓன்லைனில் பணிபுரியும் தொலைப்பணியாளர்கள் (Remote Workers), ஃப்ரீலான்சர்கள், தொழில் முனைவோர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். மேலும், அவர்கள் வெளிநாட்டு வருமானம் பெறுவதை நிரூபிக்க வேண்டும். டிஜிட்டல் நோமாட் விசா 365 நாட்கள் செல்லுபடியாகும். முதல் ஆண்டுக்கான கட்டணம் 500 அமெரிக்க டொலர். விசா பெற்றவர்கள் இலங்கையில் உள்ளூர் வேலை செய்ய முடியாது. ஆனால், அவர்கள் வீடு வாடகைக்கு எடுக்க, வங்கி கணக்கு திறக்க, குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க, co-working space-களை பயன்படுத்த அனுமதி பெறுவர். விசா விண்ணப்பம், Digital Economy அமைச்சகம் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும். இலங்கைக்கு வந்த பின், மருத்துவ பரிசோதனை மற்றும் குடிவரவு அதிகாரிகள் மூலம் இறுதி செயல்முறை நடைபெறும். இதனுடன், இலங்கை அரசு சுற்றுலா விசாவின் காலத்தை 90 நாட்களிலிருந்து 180 நாட்களாக நீட்டித்துள்ளது. SAARC நாடுகளுக்கான கட்டணம் 70 டொலர், மற்ற நாடுகளுக்கு 85 டொலர், சிங்கப்பூர், மாலத்தீவு, சேஷெல்ஸ் பயணிகளுக்கு 50 டொலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள், COVID-19-க்குப் பிறகு உலகளாவிய Remote Work ட்ரெண்டுக்கு ஏற்ப, இலங்கையின் சுற்றுலா மற்றும் பொருளாதார மீட்சியை வலுப்படுத்தும் முயற்சியாகும்.Sri Lanka digital nomad visa 2026 details, Work from beach Sri Lanka remote workers visa, Sri Lanka tourist visa extended 180 days news, Sri Lanka digital nomad visa application process, Sri Lanka remote work visa




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
