இலங்கை வரும் உலக வங்கி குழு: அநுரகுமார திஸாநாயக்க சந்திப்பு எதற்கு தெரியுமா? - லங்காசிறி நியூஸ்
நாட்டில் தடைப்பட்ட வளர்ச்சி திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்காக அடுத்த மாதம் இலங்கைக்கு உலக வங்கி குழு இலங்கை வரவுள்ளது.2022 முதல் 2023ம் ஆண்டு வரை நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக சாலைகள், கல்வி, உள்கட்டமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டது.இந்நிலையில் இதனை மீண்டும் தொடங்குவதற்காக அடுத்த மாதம் உலக வங்கி குழு இலங்கை வரவுள்ளது. உலக வங்கிக் குழுவின் இந்த வருகையை தொடர்ந்து, டிட்வா புயலா ஏற்பட்ட 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சேதங்கள் மற்றும் அதற்கான நிதி உதவி குறித்து இலங்கை அரசு விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா பிப்ரவரி 17ஆம் திகதி இலங்கை வருகிறார். இலங்கை வரும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா 18ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடுவார். இந்த சந்திப்பின் மூலம் 5வது மற்றும் 6வது மீளாய்வுகள் வெற்றிகரமாக முடிந்தால், இலங்கைக்கு சுமார் 350 மில்லியன் டொலர் வீதம் மொத்தம் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கும். இலங்கையில் ஏற்பட்ட புயல் சேதங்கள், இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகளை மீண்டும் வேகப்படுத்தவும், சர்வதேச அமைப்புகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
