நாடு தழுவிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை: இலங்கையில் ஓரே நாளில் 802 பேர் கைது - லங்காசிறி நியூஸ்
புதன்கிழமை இலங்கையில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கிட்டத்தட்ட 802 பேர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் ஊடகப் பிரிவு வழங்கிய தகவலின் படி, தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 16 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் வைத்திருந்தது தொடர்பான விசாரணைக்கு கீழ் உள்ள ஒருவரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 794 சோதனைகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.கைது நடவடிக்கையின் போது பொலிஸாரிடம் சிக்கிய நபர்களிடம் இருந்த பெரும் அளவிலான போதைப்பொருள்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஒரு கிலோகிராம் 42 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 464 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 495 கிராம் ஹெரோயின், 01 கிலோகிராம் 58 கிராம் ஐஸ், ஒரு கிலோகிராம் 85 கிராம் மதனமோதகம் மற்றும் 111 கிராம் மாவா போதைப்பொருள், 11 கிராம் 200 மில்லி கிராம் கொக்கெய்ன், 02 கிலோகிராம் 710 கிராம் கஞ்சா, 02 கஞ்சா செடிகள், 395 போதை மாத்திரைகள் என பெருமளவிலான போதைப் பொருட்களை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
