வெளிநாட்டு பணங்களுடன் சிக்கிய இலங்கையர்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
வெளிநாட்டு பணங்களுடன் சிக்கிய இலங்கையர்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு  லங்காசிறி நியூஸ்

அதிகமான வெளிநாட்டு நாணயங்களை இலங்கைக்குள் கொண்டு வர முயன்ற நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரி நடத்திய சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தியாவின் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சந்தேக நபரிடம் இருந்து இந்த வெளிநாட்டு பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் 48,900 யூரோ,14,000 அமெரிக்க டொலர் மற்றும் 26,650 இந்திய ரூபாய் ஆகியவை இருந்துள்ளது. அத்துடன் இதன் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் ரூ.24.09 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர் கண்டி அக்குரணை பகுதியை சேர்ந்த 48 வயது தொழிலதிபர் என சுங்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை