இலங்கை கலாச்சார முறைப்படி திருமணம்: குடாவ கடற்கரையில் நிறைவேறிய ஐரோப்பிய தம்பதியின் ஆசை - லங்காசிறி நியூஸ்
நேற்று வெளிநாட்டு தம்பதியர் குடாவ கடற்கரையில் இலங்கையின் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.இலங்கையின் புத்தளம், கற்பிட்டி, குடாவ கடற்கரையில் நேற்று ஐரோப்பிய நாடான ஹங்கேரியை சேர்ந்த ஜோனஸ் கோவாஸ் மற்றும் சில்வி தோத் என்ற தம்பதி மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டனர். இலங்கையின் இயற்கை அழகு மற்றும் கலாச்சாரத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருப்பதால், இலங்கை கலாச்சார முறைப்படி நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த திருமணமானது இலங்கை கலாசார விழுமியங்களுக்கு முன்னுரிமை அளித்து நடத்தப்பட்டுள்ளது, இந்த கொண்டாட்டத்தை ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆகியோர் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வைத்தனர்.இந்த திருமணத்திற்கான மணமேடையானது, தென்னோலைகளால் அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. அத்துடன் பாரம்பரிய நடனக் கலைஞர்கள் மணமக்களை மேடைக்கு அழைத்து வந்தனர், மேலும் அங்கு கலாச்சார முறைப்படி திருமணச் சடங்குகள் நடைபெற்றன. பல்வேறு இன மக்கள் வாழும் கற்பிட்டி தீபகற்பத்தில் இத்தகைய நிகழ்வு அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.இந்த சிறப்பு திருமணத்தை அப்பகுதியில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலரும் ஆர்வமாக கண்டு ரசித்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
