18 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸாகும் சிம்புவின் சூப்பர் ஹிட் படம்
முன்னணி நடிகர்களின் வெற்றி படங்கள் மீண்டும் ரீ-ரிலீசாகும் போக்கு தமிழ் சினிமாவில் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கூட அஜித்குமாரின் ‘மங்காத்தா' படம் ரீ-ரிலீசாகி வசூல் குவித்து வருகிறது. அந்தவகையில் 2008-ம் ஆண்டில் எஸ்.சரவணன் இயக்கத்தில் சிம்பு, சனா கான், சினேகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ‘ஹிட்' அடித்த ‘சிலம்பாட்டம்' படம் மீண்டும் ரிலீசுக்கு வருகிறது. புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்த படம் பிப்ரவரி 6-ந் தேதி திரைக்கு வருகிறது. சிம்பு இரட்டை வேடங்களில் நடித்த இந்த படம் வசூல் குவித்ததுடன், சிம்புவின் திரைப் பயணத்தில் முக்கியமான படமாகவும் அமைந்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும் கொண்டாடப்பட்டன. இந்த படம் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீசுக்கு வரவிருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
