“போன் கூட எடுக்க மாட்டார்கள்”- பாலிவுட்டில் சந்தித்த அவமானங்கள் குறித்து பேசிய ரகுல் பிரீத்சிங்
கமல்ஹாசனுடன் ‘இந்தியன்-2’, சிவகார்த்தி கேயனுடன் ‘அயலான்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரகுல் பிரீத்சிங். தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த ரகுல்பிரீத்சிங் பாலிவுட் திரை உலகில் அறிமுகமாகி படங்களில் நடித்து வருகிறார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்ட ரகுல் பிரீத்சிங் பாலிவுட் அறிமுகத்தின் போது சந்தித்த அவமானங்கள் குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் தெலுங்கில் பெரிய நடிகையாக இருந்த போதிலும் பாலிவுட்டில் அறிமுகமான போது என்னை ஒரு புதிய நடிகையாகதான் பார்த்தார்கள். பூஜ்யத்தில் இருந்து தொடங்க வேண்டியதிருந்தது. வெளியாட்கள் என்பதால் சிவப்பு கம்பள விரிப்புகள் கிடைக்காது. நடிகர்கள், இயக்குநர்களுக்கு போன் பண்ணினால் கூட எடுக்க மாட்டார்கள். அப்படியே எடுத்தாலும் அலட்சியமாகதான் பதிலளிப்பார்கள். ஒரு படத்தின் ஆடிஷனுக்காக அலுவலகம் ஒன்றில் மணிக்கணக்கில் காத்திருந்தேன். இது போன்ற சம்பவங்கள் எனக்கு மன உறுதியை தந்தது. இவ்வாறு அவர் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
