இந்தியாவுடன் ஒப்பந்தம்; ஐரோப்பா தனக்கு எதிரான போருக்கு நிதி அளித்துக் கொள்கிறது - அமெரிக்கா சாடல்
வாஷிங்டன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகிய இருவரும் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தனர். அவர்களது இந்த பயணத்தின்போது இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து அனைத்து ஒப்பந்தங்களின் தாய் என பெயரிடப்பட்ட, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தம் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே இறுதி செய்யப்பட்டது. இதனை இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூட்டாக அறிவித்தனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. வர்த்தக ஒப்பந்தங்கள், முதலீடு மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றில் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான நட்பு மற்றும் நம்பிக்கையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அரசின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறுகையில், “இந்தியாவுடன் ‘அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களின் தாய்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஐரோப்பா தனக்கு எதிரான போருக்கு தானே நிதி அளித்துக் கொள்கிறது. ரஷியாவுடனான நேரடி எரிசக்தி வர்த்தகத்தை ஐரோப்பா கணிசமாக குறைத்திருக்கலாம். ஆனால் இந்தியா மீது அமெரிக்கா வரிகளை விதித்துள்ள நிலையிலும், இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட ரஷிய எண்ணெய்யை வாங்குவதன் மூலம் ரஷியா-உக்ரைன் போருக்கு மறைமுகமாக ஐரோப்பிய ஒன்றியம் நிதியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
