மக்கள் தொகை கணக்கெடுப்பின் 2-வது கட்டத்தில்தான் சாதிவாரி கணக்கெடுப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்
புதுடெல்லி, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2027-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த முழுமையான தகவல்கள் ஏற்கனவே கடந்த மாதம் 12-ந் தேதி வெளியிடப்பட்டது. இருப்பினும், சாதி வாரியான கணக்கெடுப்பு குறித்து சிலர் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கம் போல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு வசதி குறித்த கணக்கெடுப்பு நடைபெறும். இரண்டாம் கட்டத்தில் தான் சாதி வாரியான கணக்கெடுப்பு உள்ளிட்ட மக்கள் தொகை கணக்கீடு நடைபெறும்.இந்த இரண்டாம் கட்டப்பணிகள் அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் தொடங்கும். அதே சமயம், ஜம்மு காஷ்மீர், இமாசலபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பனிப்பொழிவு அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும், முன்கூட்டியே அதாவது வருகிற செப்டம்பர் மாதமே இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.முதல் கட்ட கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்க உள்ளது. இதில் கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகள் குறித்த அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஜனவரி 22-ந் தேதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
