ஆன்மிக சுற்றுலா: வேன் மீது லாரி மோதி 4 பேர் பலி
மும்பை, தானே மாவட்டம், டோம்பிவிலி(மேற்கு) உமேஷ்நகர் பகுதியை சேர்ந்த 12 பேர் கொண்ட குழுவினர், திவாவை சேர்ந்த சில உறவினர்களுடன் ஆன்மிக சுற்றுலாவாக சோலாப்பூர், கோலாப்பூரில் உள்ள கோவில்களுக்கு நேற்று முன்தினம் வேனில் புறப்பட்டு சென்றனர். தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள துல்ஜா பவானி கோவில் மற்றும் பிற கோவில்களில் சாமி தரிசனம் செய்த பிறகு, அவர்கள் பண்டரிபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இரவு 7.30 மணியளவில் அந்தப்பகுதியில் அதிவேகமாக வந்த ஒரு லாரி, பக்தர்கள் சென்ற வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த சோனம் அஹிரே, சவிதா குப்தா மற்றும் யோகினி கேகனே ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு குழந்தை உட்பட 10 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். தகவல் அறிந்து வந்த சோலாப்பூர் போலீசார் படுகாயமடைந்த 10 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
