மம்முட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள "சத்தா பச்சா" படம் தமிழில் வெளியாவது எப்போது?
சென்னை, அத்வைத் நாயர் இயக்கத்தில் நடிகர்கள் அசோகன், ரோஷன் மேத்யூ, விஷாக் நாயர் மற்றும் இஷான் சௌகத் ஆகியோர் நடித்துள்ள மலையாள படம் ‘சத்தா பச்சா’. இசையமைப்பாளர்கள் ஷங்கர்-இஷ்ஸான்-லோய் கூட்டணி இசையமைக்கும் முதல் மலையாள திரைப்படமான ‘சத்தா பச்சா’ கடந்த 22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் மம்முட்டி, துல்கர் சல்மான் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கான முதல் டிக்கெட்டை நடிகர் மோகன்லால் வாங்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டது. மலையாளத்தில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் ரூ. 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மலையாளத்தில் வரவேற்பை பெற்று வரும் இப்படம் தமிழிலும் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 30ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.#ChathaPacha - Tamil and Telugu Version Releasing On January 30..✅ pic.twitter.com/XrJ1y0DCHS




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
