இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா? - முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் நியூசிலாந்து
விசாகப்பட்டினம், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த 21ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் 3 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. முதல் 3 ஆட்டங்களில் அதிரடி பேட்டிங்கால் மிரட்டி தொடரை வசப்படுத்திய இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடரும் ஆர்வத்தில் உள்ளது. டி20 தொடரை சொந்தமாக்கி விட்டதால் அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தெரிகிறது.நியூசிலாந்து அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி தடுமாறி வருகிறது. இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடர முழு பலத்தையும் இன்று வெளிக்காட்டும். அதேநேரத்தில் தொடரை இழந்து விட்ட நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசாகப்பட்டினம் மைதானத்தில் இதுவரை நான்கு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி மூன்றில் வெற்றி கண்டுள்ளது. ஒன்றில் மட்டும் தோல்வியை சந்தித்துள்ளது. இரு அணிகளின் உத்தேச பட்டியல்:- இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா அல்லது அர்ஷ்தீப் சிங். நியூசிலாந்து: டிவான் கான்வே, டிம் செய்பெர்ட், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னெர், கைல் ஜாமிசன், மேட் ஹென்றி, சோதி, ஜேக்கப் டப்பி.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
