தென்கொரியா மீது 25 சதவீதம் வரி விதிப்பு - டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பொறுப்பேற்றார். அதன்பிறகு குடியேற்ற கொள்கையில் திருத்தம், மானியம் ரத்து என பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். மேலும் தனது பேச்சை கேட்காத உலக நாடுகள் மீது அதிக வரி விதிப்பதாகவும் அச்சுறுத்தல் விடுக்கிறார். இதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அந்த நாடுகள் மீது தாறுமாறாக வரி விதிப்பது தொடர் கதையாக உள்ளது. அதன்படி சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பொருட்களுக்கு வரியை உயர்த்தினார். அந்தவரிசையில் தற்போது டிரம்பின் கவனம் தென்கொரியா பக்கம் திரும்பி உள்ளது. அதாவது தென்கொரியாவுடன் கடந்த ஜூலை மாதம் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுதொடர்பாக அதிபர் லீ ஜே மியுங்கை அக்டோபர் மாதம் சந்தித்து மீண்டும் உறுதிப்படுத்தினார். ஆனால் இதுவரை அந்த ஒப்பந்தத்தை தென்கொரியா அங்கீகரிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் தற்போது இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்காதது அவர்களது தனிப்பட்ட உரிமை என்றாலும் அமெரிக்காவுக்கு இது மிக முக்கியமான ஒன்று. எனவே இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த தாமதம் செய்ததால் தென்கொரிய பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதித்திருப்பதாக டிரம்ப் அறிவித்தார். இதன்மூலம் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவுடன் உறுதிசெய்யப்பட்ட வர்த்தக கட்டமைப்புக்கு தென் கொரிய நாடாளுமன்றம் இன்னும் ஒப்புதல் அளிக்காத நிலையில் இந்த வரி உயர்வை டிரம்ப் அறிவித்துள்ளார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
