ம.பி.: எய்ம்ஸ் மருத்துவமனையின் லிப்டில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
போபால்,மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் லிப்டின் உள்ளே பெண் ஒருவர் செல்லும்போது, முக கவசம் அணிந்து அவரை பின்தொடர்ந்த மர்ம நபர் ஒருவரும் லிப்டிற்குள் சென்றார். இந்த நிலையில், லிப்டின் கதவு திறந்ததும் அந்நபர், பெண்ணின் சங்கிலியை பறித்து கொண்டு, படியின் வழியே தப்பியோடினார். இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் பற்றி அந்த பெண், பக்சேவானியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார், இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் கவுதம் சோலங்கி கூறியுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையானது பாதுகாப்பு நிறைந்த வளாக பகுதியாகும். அதில், இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
