பட்ஜெட் கூட்டத்தொடர்: ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்
டெல்லி,2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜன.28) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை 2 கட்டங்களாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் கட்ட கூட்டத்தொடர் நாளை தொடங்கி வரும் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 2-ம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் மாதம் 9-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது. நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து வரும் 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும்.இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி நாடாளுமன்றத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்றுள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தரும்படி மத்திய மந்திரி எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை, நாளை காலை 11 மணிக்கு தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
