கர்நாடகா: கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற சித்தராமையா, டி.கே. சிவக்குமார் கைது
பெங்களூரு, கர்நாடகாவில் கவர்னர் மாளிகையை நோக்கி செல்வோம் என்ற பெயரில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் பொது செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கட்சியின் பிற உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.க்கள் திரண்டு பேரணியாக புறப்பட்டு சென்றனர். மத்திய அரசு, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பதிலாக வி.பி.-ஜி ராம் ஜி என்ற புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர்கள் பேரணியாக சென்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கவர்னர் மாளிகை அருகே போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். எனினும், அவர்கள் தொடர்ந்து முன்னேற முயன்றனர். இதனால், போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை கலந்து செல்லும்படி போலீசார் கூறினர். ஆனால், அவர்கள் தொடர்ந்து பேரணியாக செல்ல முயன்றதும் போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சம்பவம் நடப்பதற்கு முன் போராட்டக்காரர்கள் முன்னிலையில் பேசிய சித்தராமையா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசின்போது, ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை மத்திய அரசு அழிக்க முயற்சிக்கிறது. இந்த வி.பி.-ஜி ராம் ஜி திட்டத்தில் உள்ள ராம், தசரத ராமரோ அல்லது சீதா ராமரோ அல்ல. அது ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா இயக்கத்தின் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான உத்தரவாதம் (கிராமின்) என்பதே ஆகும் என்றார். இதற்கு முன்னர் என்ன வேலை செய்ய வேண்டும் என பஞ்சாயத்துகள் முடிவு செய்யும். ஆனால், பஞ்சாயத்துகளின் பங்கு கடுமையாக குறைக்கப்பட்டு உள்ளது என அவர் குற்றச்சாட்டாக கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
