காங்கிரஸ் நிகழ்ச்சியில் டி.கே., டி.கே. என கோஷம்... ஆத்திரமடைந்த சித்தராமையா: வைரலான வீடியோ
பெங்களூரு, கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோது, முதல்-மந்திரி அதிகார பகிர்வு தொடர்பான தகவல் வெளியானது. இதன்படி, இரண்டரை வருட காலம் சித்தராமையாவும், மற்றொரு இரண்டரை வருட காலத்தில் டி.கே. சிவக்குமாரும் முதல்-மந்திரி பதவியை வகிப்பார்கள் என தகவல் கசிந்தது. ஆனால், கட்சியின் தலைமையிடம் இருந்து இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை. எனினும், தலைமைத்துவம் தொடர்பான பூசல் கட்சிக்குள் புகைந்து கொண்டே இருந்தது. இந்நிலையில், 2025-ம் ஆண்டு நவம்பரில் இந்த ஆட்சியின் முதல் இரண்டரை வருட காலம் நிறைவடைந்தது. இதனால், முதல்-மந்திரி மாற்றம் செய்யப்படுவார் என யூகங்கள் கிளம்பின. எனினும், சித்தராமையாவே முதல்-மந்திரியாக தொடர்ந்து நீடித்து வருகிறார். இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி ஒன்று இன்று நடந்தது. அப்போது டி.கே. சிவக்குமாரை குறிப்பிடும் வகையில் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் டி.கே., டி.கே. என கோஷம் எழுப்பியபடி இருந்தனர். அப்போது மேடையில் பேச எழுந்து சென்றிருந்த சித்தராமையா, அவர்களை பார்த்து சற்று நேரம் பேசாமல் நின்றார். எனினும், அவர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பவும் ஆத்திரமடைந்த அவர், கையை அசைத்து அவர்களை அமைதியாக இருக்கும்படி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கூட இளைஞர் காங்கிரசாரை அமைதியாக இருக்க வேண்டும் என்றும் இல்லையெனில் கடும் விளைவுகள் ஏற்படும் என அச்சுறுத்தல் விடுத்த காட்சிகளும் பதிவாகி இருந்தன. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் தற்போது, முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமாரும் பதவி வகித்து வருகின்றனர்.The Congress crowd no longer seems enthused by Siddaramaiah. Instead, they’re bursting with excitement to welcome swayamsevak D. K. Shivakumar, chanting “DK! DK! DK!” with visible joy.Is it because Siddaramaiah was never an original Congressman and joined Congress from JD(S)… https://t.co/MiqAp69wWV pic.twitter.com/LBynS4JH7E




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
