அசாம்: ஆற்றில் கவிழ்ந்த படகு; 6 பேர் மாயம்
பார்பேட்டா, அசாமின் பார்பேட்டா மாவட்டத்தில் ரஹாம்பூர் பகுதிக்கு உட்பட்ட இடத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் இன்று படகு ஒன்று பயணித்து கொண்டிருந்தது. அப்போது, அது திடீரென ஆற்றின் நடுவே கவிழ்ந்தது. இதில், படகில் பயணித்த 6 பேர் காணாமல் போனார்கள். இது தகவல் அறிந்து, தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, போலீசார் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படகில் உயிர்காக்கும் கவசம் எதுவும் இல்லை என தகவல் தெரிவிக்கின்றது. கடந்த ஆண்டு அக்டோபரில் பரத்பூர் பகுதியில் படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த 22 பேரில் 13 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. 8 பேர் காணாமல் போனார்கள். அவர்களை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
