மியான்மரில் தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கம்; மக்கள் அதிர்ச்சி
நைபிடா, இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 25-ந்தேதி 14 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன்படி, அன்று மாலை 4.13 மணியளவில், ரிக்டரில் 3.6 அளவிலான நிலநடுக்கமும், மாலை 4.27 மணியளவில், ரிக்டரில் 3.5 அளவிலான மற்றுமொரு நிலநடுக்கமும் பதிவானது. அன்றிரவு 9.52 மணியளவில், ரிக்டரில் 3.9 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதேபோன்று, கடந்த 24-ந்தேதி மியான்மரில் இரவு 7.48 மணியளவில், ரிக்டரில் 3.4 அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி இருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதிப்படுத்தியது. நேற்றும் காலை 9.03 மணியளவில், ரிக்டரில் 3.6 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இந்த சூழலில், இன்று மதியம் 1.04 மணியளவில், ரிக்டரில் 3.4 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 139 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால், கடந்த 24-ந்தேதி ஒரு முறையும், கடந்த 25-ந்தேதி மூன்று முறையும், நேற்று ஒரு முறையும் இன்றும் என மியான்மரில் அடுத்தடுத்து 4 நாட்களில் 6 முறை ஏற்பட்டு நிலநடுக்க தாக்கம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
