பாகிஸ்தானில் வக்கீல் தம்பதிக்கு 17 ஆண்டு சிறை தண்டனை
இஸ்லாமாபாத், பாகிஸ்தானை சேர்ந்தவர் ஜைனாப் மசாரி. இவருடைய தாய் ஷீரன் மசாரி. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெரிக்-இ-பாகிஸ்தான் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தார். அவருடைய ஆட்சியின்போது மனித உரிமைகள் நலத்துறை மந்திரியாக பதவி வகித்தார். வக்கீலான ஜைனாப் மசாரி மனித உரிமைகள் நலனிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவருடைய கணவர் ஹாதி அலியும் வக்கீலாவார். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்னர் இவர் அந்த நாட்டின் ராணுவத்தை விமர்சித்தும், ராணுவத்தின் தலைமை தளபதி அசிம் முனீரை விமர்சித்தும் பதிவிட்டார். இதுதொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டு தேசவிரோத வழக்கு பதியப்பட்டது. இஸ்லாமாபாத் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். விசாரணை முடிவில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டநிலையில் ஜைனாப் மசாரி மற்றும் அவருடைய கணவர் இருவருக்கும் தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் கோர்ட்டு தீர்ப்பளித்தது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
